மொறுமொறுப்பான மஷ்ரூம் வெங்காய பக்கோடா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

காளான் - 1 கப்
கடலை மாவு - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

வெறும் 10 நிமிடம் போதும்... மொறுமொறுப்பான மஷ்ரூம் வெங்காய பக்கோடா | How To Make Mushroom Onion Pakoda

 

செய்முறை

அகலமான பாத்திரம் ஒன்றில் நறுக்கிய காளான் மற்றும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்க்கவும்.

பின்பு கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

வெறும் 10 நிமிடம் போதும்... மொறுமொறுப்பான மஷ்ரூம் வெங்காய பக்கோடா | How To Make Mushroom Onion Pakoda

காளானை பொரித்து எடுப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து, சூடானதும் காளானை போட்டு பாதி வெந்த பின்பு தனியாக எடுக்கவும். பின்பு சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் சேர்த்து மறுபடியும் பொரித்து எடுத்தால் மொறு மொறு பக்கோடா தயார்.

பக்கோடா சுவையாக வரவேண்டும் என்றால் மாவை குறைவாக போட்டு, காளான், வெங்காயத்தை அதிகமாக சேர்க்கவும்.