பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 22 நாட்கள் ஆன நிலையில் இதன் ப்ரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 19 நாட்கள் கடந்து விட்டது. கடந்த சீசன் போன்று இந்த சீசனும் பிக்பாஸாக இல்லாமல் சவுண்ட் பாக்ஸாக இருக்குமோ என்று ஆடியன்ஸ் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் வேறாக இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன் மேன் 3 பேர் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், ஆளும் அணி, எதிர் அணி என்று சட்டமன்றம் வடிவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது வீட்டு தலைவர்கள் மற்றும் போட்டியாளர்கள் வாக்கு அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், மக்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் வார இறுதியிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கடந்த வாரம் ஆனந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து, சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட சாவின்யா, ஜாவித், லட்சுமி பிரியா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இனி தான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது.