சமீபத்திய பேட்டி ஒன்றில், ராதிகா ஆப்தே, எந்தவித காரணமும் இன்றி சக நடிகர்களை முத்தமிடச் சொன்னது , தனது உள்ளாடையுடன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கக் கேட்டது குறித்து நினைவு கூர்ந்தார்.
பல படங்களில் துணிச்சலான கேரக்டர்களிலும், நிர்வாணமாகவும் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, இதை வைத்தே தன்னிடம் வேண்டுமென்றே பலரும் உள்ளாடையுடன் நடியுங்கள், முத்தம் கொடுங்கள் என்று கேட்டதாக தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
ராதிகா ஆப்டே தனது திரைப்பயணத்தில் ஆபாச மற்றும் நெருக்கமான காட்சிகள் உட்பட பல துணிச்சலான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், திரைக்கதைக்குத் தேவைப்படாதபோது, இதுபோன்ற காட்சிகளில் நடிக்க அவர் சம்மதிப்பார் என்று சில திரைப்பட இயக்குநர்கள் தவறாகக் கருதுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், எவ்விதக் காரணமும் இன்றி சக நடிகர்களுக்கு முத்தம் கொடுக்கச் சொன்னதையும், உள்ளாடைகளுடன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கக் கேட்டதையும் ராதிகா நினைவுகூர்ந்தார்.
'ஜூம்' (Zoom) ஊடகத்துடனான உரையாடலின் போது ராதிகா பேசுகையில், எனது சில படங்களில் நிர்வாணமாக நடித்த பிறகு, எந்தக் கேள்வியும் கேட்காமல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க அவர் சம்மதிப்பார் என்ற எண்ணம் திரைத்துறையில் உருவானது. தொடக்கத்தில் நான் முழு நிர்வாணமாகச் சுமார் நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்திருந்தேன். பலரும் ‘இவ பண்ணிடுவா (Yeh toh karlegi na)’ என்று நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் நான் அவர்களிடம், ‘நான் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டேன்’ என்று சொல்ல வேண்டியிருந்தது.
ஏனெனில், நான் இப்போது அதைச் செய்துவிட்டேன்; அதைப்பற்றி எனக்கு இன்னும் நன்றாகத் தெரியும். எனவே நான் அவர்களிடம், ‘இதை ஏன் செய்யச் சொல்கிறீர்கள்? இப்போது நான் ஏன் அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும்?’ என்று கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர்கள், ‘கொஞ்சம்தானே, பண்ணுங்களேன் (Karlo na thoda)’ என்று பதிலளிக்கிறார்கள். பலரிடமிருந்து எனக்குக் கிடைத்த பதில் இதுதான். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ‘சும்மா கொஞ்சம் முத்தம், ஒரு 15 வினாடி ஸ்பாட் இம்ப்ரவைசேஷன் (Improvisation)’ என்பார்கள். நான் ‘மன்னித்துக்கொள்ளுங்கள், என்ன சொல்றீங்க?’ என்று கேட்டுவிட்டேன்” எனக் கூறினார்.
மேலும், ஒரு சண்டைக் காட்சியில் படப்பிடிப்பு நடந்தபோது, உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்கப்பட்ட விசித்திரமான கோரிக்கையையும் இருக்கிறது. “ஒரு படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள், ‘இந்த சண்டைக் காட்சியை நீங்கள் செய்ய முடியுமா? சட்டையின் பொத்தான்களைப் போடாமல் நடித்தால் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இது ஒரு சண்டைக் காட்சி. அப்படியென்றால் சட்டை நகரத்தானே செய்யும்? இது அடிப்படை இயற்பியல் (Basic physics)’ என்றேன்.
அதற்கு அவர்கள், ‘வெறும் ப்ரா மற்றும் உள்ளாடையுடன் செய்தால் என்ன?’ என்று கேட்டார்கள். நான், ‘என்னை வைத்து என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டேன்,” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ராதிகா ஆப்டே தற்போது நெட்ஃபிலிக்ஸின் (Netflix) 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' (Lust Stories 3) தொகுப்புத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
