இந்து மதத்தை பொருத்தவரையில் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்டுகின்றது.
இவற்றை சரியாக பின்பற்றியதன் காரணத்தாலேயே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடிந்தது.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் நாம் சாப்பிடும் முறை நாம் அமர்ந்து சாப்பிடும் திசை என்பன நமது வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் என்பவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றன. அது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கிழக்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கிழக்கு திசை இந்திரனுக்கு உகந்த திசையாக இருப்பதால், இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும் கல்வி நிலையில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கு திசை
சாஸ்திரங்களின் பிரகாரம் மேற்கு திசை செல்வதற்கு அதிபதியான லட்சுமி தேவியின் இருப்பிடமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
தெற்கு திசை
தெற்கு திசை எமனுக்கு உரிய திசையாக பார்க்கப்படுகின்றது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் வாழ்வில் புகழ் நற்பெயர் என்பன பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம்.
வடக்கு திசை
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வடக்கு திசை சிவனுக்குரிய திசை ஆகும். அதனால் இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இந்த திசை நோக்கி இருந்து சாப்பிடுவதால் வீட்டில் உறவுகளின் மத்தியில் விரிசல் ஏற்டும். மேலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படகூடும்.