ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் புதுப்புது பிரச்சனைகள் வெடித்து வரும் நிலையில் தற்போது மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கியுள்ள இந்த 10-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம், லட்சுமி பிரியா,  ஷாதிகா, நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், முத்தழகி,  தன்யா, ஒப்பனை அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளில், நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக்குறைபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், சீரியல் நடிகை ஆனந்தி புது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளார். வந்ததுமே எல்லோரின் குறைகளையும் சொல்லி அனைவரையும் கடுப்பேற்றிய நிலையில் லட்சுமி பிரியா, ஆனந்தியை கடுப்புடன் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இனி தான் ஆட்டமே இருக்கு என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.