எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்காக அல்லாமல், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.

கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடர்வதற்காக கார் பந்தையங்களில் பங்கேற்று வருகின்றார்.

அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar! | Why Ajith Kumar Is Trending On X Platform Fans

எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் #AjithKumar

இந்நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித் குமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், முதல்வரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.