ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.
குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். இந்த பயணம் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குரு நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர்.
குரு வருடத்திற்கு ஒரு முறை தான் தன் இடத்தை மாற்றி கொள்வார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
வருகின்ற 2025ம் ஆண்டு இந்த நட்சத்திர பயணம் செல்வத்தை வழங்கப்போகிறது. இந்த பயணம் நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இதனால் பணத்தின் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- உங்களுக்கு ரோகிணி நட்சத்திர பயணம் நல்லவற்றை அள்ளி தர போகிறது.
- பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
- எங்கிருந்தாலும் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.
- எந்த காரியத்திலும் உங்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த காரியங்கள் முடியும்.
கடகம்
- ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.
- உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
சிம்மம்
- உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவானின் ரோகிணி நட்சத்திர இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
- குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.