இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு தொன்று தொட்டு, உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக திகழ்கின்றது.. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்தது தான். 

அதுவும் இதில் அல்லிசின் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் என்ன தான் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்  என மருத்துவ நிபுணர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

இது குறித்து மருத்துவர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு முழுழுமையான விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

யாரெல்லாம் பூண்டை அதிகமாகத் தவிர்க்க வேண்டும்?

இரத்தத்தை மெலிதாக்கும் மருந்து எடுத்துக்கொள்பவர்கள்: பூண்டு அதிகமாக உட்கொள்வது இரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு அல்லது சிறிய காயத்திற்கே அதிகமாக இரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

 

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்: பூண்டு இரத்த நாளங்களைத் தளர்த்தி, ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கக்கூடும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம்.

அல்சர், அசிடிட்டி அல்லது வயிற்று எரிச்சல் உள்ளவர்கள்: குறிப்பாக பச்சைப் பூண்டை அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சனைகளை தீவிரப்படுத்தலாம். உணவில் சிறிதளவு சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது.

IBS உள்ளவர்கள்: பூண்டில் உள்ள fructans சிலருக்கு வயிற்றுவலி, வீக்கம் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். பூண்டு ஒவ்வாமை உள்ளவர்கள்: அரிப்பு, உதடு வீக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பூண்டைத் தவிர்க்க வேண்டும்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

பாலூட்டும் தாய்மார்கள்: அதிக அளவு பூண்டு சாப்பிடுவது தாய்ப்பாலின் வாசனையை மாற்றி, சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தலாம்.

பூண்டுடன் எதில் கவனம் தேவை?

மது, ஒமேகா-3 மற்றும் வைட்டமின் E சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் பூண்டை அதிகமாக சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல், அதிக காரமான உணவுகளுடன் பூண்டை அதிகமாக சேர்ப்பதும் அசிடிட்டியை அதிகரிக்கலாம். பூண்டு நல்லதுதான என்றாலும், உங்கள் உடல்நிலை அல்லது மருந்துகளைப் பொறுத்து, பூண்டின் அளவை கவனமாகத் தேர்வு செய்வதே சிறந்தது என மருத்துவர் குறிப்பிள்ளார்.