ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரிஸில் போர்க்குணமிக்க ஜிஹாதிகளால் கொல்லப்பட்ட 130 பேருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் மக்கள் நினைவுகூறுகின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கொல்லப்பட்டவரகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பூங்கொத்து வைத்து உறவுகளை இழந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் பிரான்ஸின் அடையாளம் என வர்ணிக்கப்படும் ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்து இருளில் மூழ்க உள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு நினைவுகோரும் வகையில், இரவு 8 மணியோடு பிரான்ஸின் அடையாளமாக விளங்கும் ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்து, இருளில் மூழ்குவதாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் மூன்று குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் 130பேர் உயிரிழந்தனர் மற்றும் 350பேர் காயமடைந்தனர்.
படாக்லான் திரையரங்கில் ஒரு ரொக் இசை நிகழ்ச்சியைத் தாக்கிய துப்பாக்கிதாரிகள் 90பேரைக் கொன்றனர்.

ஐந்து ஆண்டுகளில், இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாக பிரான்ஸ் மீண்டும் எச்சரிக்கையுடன் உள்ளது. சமீபத்திய வாரங்களில் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன.

தெற்கு நகரமான நைஸில் ஒரு தேவாலய தாக்குதல், கடந்த மாதம் தனது பாடசாலை அருகே வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பாட்டி தலை துண்டிக்கப்பட்டது உட்பட மூன்று தாக்குதல் நடத்தப்பட்டமை நினைவுக்கூரத்தக்கது.