அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

ஆணைக்குழு குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததுடன் அதன் அதிகாரத்தை சவால் செய்ததாக, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உபாலி அபேரத்னே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சீ. அலவத்துவல மற்றும் மயந்த திசநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சாட்சியங்களை பதிவு செய்ய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நவம்பர் 23 வரை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.