செப்டம்பர் மாதம் புதன் பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இதனால் இந்த காலகட்டம் இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு.

அதாவது, கிரகங்களின் இளவரசர் என்று போற்றக்கூடிய புதன் பகவான் ஒருவருக்கு அறிவு, ஞானம், கணக்கு, பேச்சு திறன் ஆகியவற்றை வழங்கக் கூடியவர்.

அந்த நிலையில், தற்பொழுது புதன் பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். இவர் செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ராசியில் சுமார் 20 நாட்கள் அவர் இருக்கிறார். பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொடுக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | 2026 Sept 7 Virgo Transit Astrology Prediction

மேஷம்:

மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய இடமாற்றம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன்களை கொண்டு வரப் போகிறது.

தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய தன்மை உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து மனதில் நேர்மறை ஆற்றல் உயரும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சியானது இவர்களுக்கு பல்வேறு வகையில் நன்மையை கொடுக்கப்போகிறது. உங்களுடைய பேச்சுத் திறன் மேம்படும்.

எளிதாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் புதன் பெயர்ச்சி இவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் வருமானம் தொடர்பாக ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. எதிர்பார்த்து காத்திருந்த சாதகமான பலன்களை பெற போகிறார்கள்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். பதிவு உயர்வு, சம்பள உயர்வு போன்ற அற்புதமான ஏற்றங்களை இந்த காலகட்டங்களில் பெறப்போகிறீர்கள்.