புற்றுநோய் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் புற்றுநோய் பலருக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கு மரபணு காரணம் என்று பலரும் நினைத்து வருகின்றனர். 

ஆனால் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. செல்களின் மரபணுவில் ஏற்படும் மாற்றம், வயது, புகைப்பழக்கம், மது, உடல் பருமன், சரியாக வேலை செய்யாமல் இருத்தல், உணவுமுறை, வைரஸ் தொற்று, மரபியல் காரணி என பல காரணங்கள் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கின்றது.

ஆனால் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் 38 சதவீதம் அன்றாடம் செய்யும் சில நடவடிக்கைகளை தவிர்த்தால் தடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

அவ்வாறு புற்றுநோயை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

புற்றுநோய் செல்வதற்கு வளர்வதற்கு முக்கியமாக காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளது. இதனை தடுக்க வேண்டுமெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மைதா போன்ற ஸ்டார்ச் உணவுகள் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களை தவிர்க்க வேண்டுமாம்.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உடலில் வீக்கத்தினை உண்டாக்கி, புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆதலால் செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இயற்கை இனிப்புகளை பயன்படுத்தலாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer

வைட்டமின் டி குறைபாடு

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருப்பதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். ஆதலால் காலை நேர இளவெயிலில் 15 முதல் 20 நிமிடங்கள் நிற்பது அவசியம். இதனால் இயற்கையாகவே வைட்டமின் டி-யை பெற முடியும்.

தற்போதைய நவீன வாழ்க்கையில் பலருக்கும் சூரிய ஒளி படாமல் இருப்பதால், இந்த சத்து குறைபாடு ஏற்படுகின்றது. பாதிப்பு தீவிரமாக இருந்தால் சத்து மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer

 

விரதம் இருப்பது

விரதம் இருப்பதால் உடம்பில் உள்ள நச்சுக்கள், பழுதடைந்த செல்கள் இவைகள் வெளியேறுகின்றது. தினசரி வாழ்க்கையில் குறிட்ட இடைவெளி விட்டு உணவு உண்ணும் பழக்கத்தினை மேற்கொள்ளவும். 

வாரம் ஒருமுறை இரண்டு வேளை விரதம் இருப்பது நல்லது. இவ்வாறு இருப்பதால், ஆட்டோஃபேஜி என்ற சூழற்சி ஏற்பட்டு சேதமடைந்த செல்கள் அழிக்கப்பட்டு புற்றுநோய் உருவாவதையும் தவிர்க்கின்றது.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer

நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உடலை சுறுசுறுப்பாக வைப்பது மிகவும் முக்கியமாகும். அதாவது தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது திசுக்களில் உள்ள மைட்டோகாண்டரியாக்கள் வலிமை பெறுவதுடன், ஏற்கனவே சேதமடைந்த மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த மைட்டோகாண்ட்ரியாக்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுமாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer

மன ஆரோக்கியம் அவசியம்

பொதுவாக மனிதர்களுக்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதிகப்படியான மன அழுத்தம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி நோய்களுக்கு வழிவகுக்குமாம்.

ஆதலால் மூச்சுப்பயிற்சி, போதுமான தூக்கம், பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடுவது மன அழுத்தத்தினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

நாள்பட்ட மன அழுத்தமானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, புற்று போன்ற தீவிர நோய் தாக்குவதற்கான சூழல் உருவாகின்றதாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாடம் செய்ய வேண்டியது என்ன? | Doctor Suggests Tips To Prevent Cancer