பொதுவாக பழைய வருடத்தில் இருந்து புது வருடத்திற்கு செல்ல முன்னர் பழைய விடயங்கள் அனைத்தையும் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டும் என நினைப்போம்.
அதில் ஒன்று தான் காலண்டர் மாட்டுதல், வருட இறுதியில் கடைகளில் காலண்டர்கள் அடித்து வாடிக்கையாளராக வருபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இவ்வாறு வீடுகளுக்கு மாட்டுவதற்கு காலண்டர்கள் வாங்கும் போது உருவம் போட்ட காலண்டர்கள் வாங்காமல் இருப்பது நல்லது.
அத்துடன் இது போன்ற காலண்டர்கள் மாட்டுவதால் மகாலட்சுமி, வாராகி அம்மன் வரவு தாமதமாகுமாம்.
அந்த வகையில் இது தவிர புத்தாண்டு நாளன்று என்ன மாதிரி விஷயங்களை செய்தால் வரப் போகும் ஆண்டு சூப்பரான ஆண்டாக நமக்கு அமையும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆண்டுதோரும் ஆங்கில புத்தாண்டோ, தமிழ் புத்தாண்டோ இப்படி எதுவாக இருந்தாலும் சரி, பிறக்க போகும் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது வழக்கம்.
2023 ல் இருந்த கஷ்டங்கள் அடுத்த ஆண்டுக்கு வரக் கூடாது அல்லது நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு.
ஆண்டு முழுவதும் நல்ல படியாக அமைய புத்தாண்டு அன்று நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் ரொம்ப முக்கியம். இது தான் அந்த ஆண்டின் செல்வம், சுப காரியங்கள் இப்படி அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது.
காலையில் எழுந்த உடனேயே குளித்து விட வேண்டும்.
- குளிக்கும் தண்ணீரில் முதலில் சிறிது கல் உப்பை சேர்க்க வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அகற்றி விடும்.
- சிறிது மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும். இதுவும் எதிர்மறை ஆற்றல்களை நீங்கி, வாழ்வில் மங்கலங்களை நிறைய செய்யும்.
- கொஞ்சமாக சுத்தமான பாலை சேர்க்க வேண்டும். இது மகாலட்சுமியின் கடாட்சமாக வாழ உதவியாக இருக்கின்றது.
காலையில் வீட்டு வாசலில் மஞ்சள் தடவிய அரிசி மாவில் கோலமிட வேண்டும். மஞ்சள் நிற திரி இட்டு, நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
வீட்டில் உள்ளே நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அன்னாச்சிப்பூ நறுமணம் கொண்ட ஊதுபத்தியை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
பிறக்கவிருக்கும் புத்தாண்டு 8ம் இடத்தில் சனியின் ஆதிக்கத்துடன் பிறக்கின்றது. இதனால் இந்த ஆண்டில் கூடிக் கொண்டிருக்கும் வராஹி அம்மனை வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
புத்தாண்டு அன்று ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரம் நேரம் பார்த்து புதிதாக தேங்காய் ஒன்றை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பொருள் முதலில் வாங்குவது சிறந்தது.