குரு பகவான் அஸ்தமன நிலைக்கு சென்றுள்ள நிலையில் நேர்மறையான ஆற்றலை பெற்று வெற்றியடையயும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு அஸ்தமனம்
ஜோதிடத்தில் இருக்கும் 9 கிரகங்களில் முக்கியமான பார்க்கப்படுவது குரு பகவான் ஆகும். குரு பகவானி்ன் பெயர்ச்சி 12 ராசியினருக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
குரு பகவான் செல்வம், அதிர்ஷ்டம், வேலை இவற்றிற்கு காரணமாக இருக்கின்றது. குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
குரு பகவான் அஸ்தமன நிலைக்கு சென்றுள்ளார். அதாவது கடந்த 14ம் தேதி கடக ராசியில் அஸ்தமத்தித்த குரு ஆகஸ்ட் 12ம் தேதி வரை அஸ்தமன நிலையில் இருக்கின்றார்.
இதனால் 30 நாட்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் இவற்றினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் குருவின் அஸ்தமனத்தினால் நினைத்த காரியங்களை வெற்றியாக நிறைவேற்றுவார்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருப்பதுடன், கல்லியில் முன்னேற்றம் கிடைக்கும்.
வேலையில் எதிர்பார்த்த பலனை அடைவதுடன், உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளதுடன், புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டுமாம். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும்.

கடகம்
குரு அஸ்தமனத்தினால் கடக ராசியினருக்கு நன்மைகள் கிடைப்பதுடன், சுப பலன்களையும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
பழைய கடன்கள் அடைகின்றது. பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரை பெறுவீர்கள். வரவுகளில் இருந்த நெருக்கடி குறையும், குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்து கிடைப்பதுடன், எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் கவனம் தேவை.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த குரு அஸ்தமனத்தினால் நல்ல பலன் கிடைப்பதுடன், ஏற்கனவே இருந்து வந்த சிறுசிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதுடன், எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள்.
தந்தை வழி உறவுகள் மூலமாக ஒத்துழைப்பு உண்டாகுவதுடன், நீண்ட தூர பயண சிந்தனைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
முயற்சிக்கு ஏற்ற முன்னேற்ற வாய்ப்பு கிடைப்பதுடன், விரும்பிய பொருட்களை வாங்கி மகிழவும் செய்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும்.
சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் நீங்கள் வியாபாரத்தில் ஆதாயம் பெறுவீர்கள்.

