2026-ஆம் ஆண்டில் நடக்கும் இந்த முதல் சனி பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மையையும், மூன்று ராசிகளுக்கு கஷ்ட காலத்தையும் வழங்க இருக்கிறது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முழுவதும் மீன ராசியில் சனி நேரடியாகப் பயணிப்பார், பின் ஜூலை 27, 2026 அன்று மீன ராசியில இருந்தப்படியே வக்கிரமாக மாறுவார். அதன் பிறகு, டிசம்பர் 11, 2026 அன்று மீண்டும் மீன ராசியில் நேரடியாகப் பயணிக்கத் தொடங்குவார்.

2026 சனி பெயர்ச்சி ; இந்த இராசிகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் | 2026 Saturn Transit Certain Zodiac Must Beware

மிதுனம்: புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி உண்டாகும். பொருள், நகை உள்ளிட்ட சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும். செலவுகள் குறையும்.

கடகம்: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் கௌரவம் மற்றும் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வெளிநாடு முயற்சிகள் கைகூடும். சுயமாக தொழில் செய்து வருபவர்கள் அதை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்: பண பிரச்சனைகள் குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். எதிர்பாராத பண வரவு மற்றும் தனயோகம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேஷம்: உடல் ரீதியான பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் எழலாம்.

சிம்மம்: நிதி ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எடுக்கும் காரியங்களை முடிக்க முடியாமல் போகலாம் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

தனுசு: திடீர் செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் செய்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீட்டையும் செய்வதற்கு முன்னரும் அவசரப்படக்கூடாது. நிதி சார்ந்த இழப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.