முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டினர். 

இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில், இயக்குநர் ஏ.எல்.விஜய்  இன்று முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது கடந்த 2013-ம் ஆண்டு விஜய் நடிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய 'தலைவா' திரைப்படத்தின் மாஸ் டேக்லைனான 'TIME TO LEAD' (தலைமையேற்க வேண்டிய நேரம்) என்ற வாசகம் மற்றும் விஜய்யின் கம்பீரமான படம் இடம்பெற்ற ஒரு சிறப்புப் புகைப்படத்தை முதலமைச்சருக்கு வழங்கினார். முதலமைச்சர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல் விஜயுடனான சந்திப்பின் போது எடுத்தப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

'TIME TO LEAD' வாசகத்தின் பின்னணி

'தலைவா' திரைப்படம் வெளியான போது இந்த வாசகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, படத்தின் வெளியீட்டுக்கும் பல முட்டுக்கட்டைகள் போடக் காரணமாக அமைந்தது. ஆனால், அன்று சினிமாவுக்காக வைக்கப்பட்ட அந்த வாசகம், இன்று நிஜமாகவே உண்மையாகி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருவதை இந்தச் சந்திப்பு நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவேகமாகப் பரவி, ட்ரெண்டாகி வருகின்றன.