பொதுவாக ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினையால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதற்காக கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டில் கிடைக்கக்கூடிய வெங்காயத்தை பயன்படுத்தலாம். வெங்காயத்தில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அதே போன்று அதிலுள்ள தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டான Quercetin இருக்கிறது. இது அழற்சியை எதிர்த்து போராடுகிறது. அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

இ்ப்படி ஏகப்பட்ட பலன்களை தன்வசமாக வைத்திருக்கும் வெங்காயத்தின் சாறு மற்றும் வெங்காய எண்ணெய்யை தலைமுடி உதிர்வதை தடுக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில், முடி பராமரிப்புக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

அப்படியாயின், தலைமுடி பிரச்சினைகளை கட்டுபடுத்தி, தலைமுடியை வேகமாக வளரச் செய்வது எண்ணெய்யா? சாறா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்காயத்தின் சாறா? எண்ணெய்யா? | Onion Juice Vs Oil Which Better For Hair Growth

வெங்காய சாற்றில் அதிக சல்பர் உள்ளதால் இது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும் கொகாஜன் புரதத்தின் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற நினைப்பவர்களுக்கு சல்பர் அவசியம்.

இதன் சேர்மங்கள் முடி நுண்குழாய்களை தூண்டி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடி நுண்குழாய்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர ஆரம்பிக்கிறது. 

அதே போன்று வெங்காயத்தில் “குர்செடின்” போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. வெங்காய சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் பாதுகாப்பை வழங்குகிறது.

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்காயத்தின் சாறா? எண்ணெய்யா? | Onion Juice Vs Oil Which Better For Hair Growth

பொடுகு மற்றும் உச்சந்தலை பகுதியில் ஏற்படும் தொற்றுக்களை இது குறைக்கிறது. எனவே இயற்கை தீர்வுகளை விரும்புவோருக்கு வெங்காய சாறு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.  

வெங்காய  எண்ணெயில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் கலக்கப்படுகிறது. இதனால் தலைமுடி வளர்ச்சியில் வெங்காய எண்ணெய் கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்கிறது. அத்துடன் தலைமுடியை ஈரப்பதமாக்கும் வேலையையும் செய்கிறது.

வெங்காய சாற்றை பயன்படுத்தும் ஒருவருக்கு குறைபாடுகளுக்கு தீர்வு என்றாலும், அதனால் அதிகமான துர்நாற்றம் எழும். ஆனால் வெங்காய எண்ணெய் லேசான வாசனையை கொண்டிருக்கும்.

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்காயத்தின் சாறா? எண்ணெய்யா? | Onion Juice Vs Oil Which Better For Hair Growth

வெங்காய எண்ணெயில் உள்ள கேரியர் எண்ணெய்கள் முடிக்கு ஆழமான கண்டிஷனிங்கை வழங்குகின்றன. அதன் அமைப்பை மேம்படுத்தி, இயற்கையான பளபளப்பு சேர்க்கிறது.

வெங்காய சாற்றை போன்று வெங்காய எண்ணெய்யும் முடி நுண்குழாய்களை வலுப்படுத்தி முடி ஊதிர்தலை குறைக்கும். வறட்சி மற்றும் முடி உதிர்தலை நிவர்த்தி செய்ய விரும்புவோருக்கு வெங்காய எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

 தீர்வு

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்காயத்தின் சாறா? எண்ணெய்யா? | Onion Juice Vs Oil Which Better For Hair Growth

வெங்காய சாறு Vs வெங்காய எண்ணெய் தேர்வு இரண்டில் ஒன்று என்றால் அது தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்து இருக்கும். வெங்காய சாறு அதன் வளமான சல்பர் உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்.

அதே போன்று வெங்காய எண்ணெய், கூடுதல் கேரியர் எண்ணெய்கள் மற்றும் மிகவும் இனிமையான வாசனையுடன் இருக்கும். இது ஒரு தனிநபரின் விருப்பங்களை பொறுத்து அமையும்.             

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்காயத்தின் சாறா? எண்ணெய்யா? | Onion Juice Vs Oil Which Better For Hair Growth