சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, கரடி, சிறுத்தை உள்படட பல்வேறு காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவு தேடி சாலைகளில் சுற்றி திரிகிறது. அவை தண்ணீருக்காக ரோட்டை அடிக்கடி கடந்து செல்கிறது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப் பகுதியிலும் தினமும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி செல்லும் சாலையில் ஒற்றை யானை உணவு தேடி வந்தது. அந்த யானை திடீரென அந்த பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அந்த வழியாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.

யானையின் அருகே இரு சக்கர ஒன்று வாகனம் வந்தது. இதை கண்ட அந்த யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்டி கொண்டு சென்று உயிர் தப்பினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, ஒற்றை யானை மிகவும் ஆக்ரோ‌ஷமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வனப்பகுதிக்குள் ஒற்றை யானையை கண்டால் வாகனங்கள் நீண்ட தூரம் தள்ளி நிறுத்துங்கள். யானை அருகே செல்ல வேண்டாம். யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பிறகே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.