பிரின்ஸ் நருலா - யுவிகா செளத்ரி
கன்னட தொலைக்காட்சியில் பிரபல ஜோடிகளில் ஒருவர்கள் தான் பிரின்ஸ் நருலா - யுவிகா செளத்ரி ஜோடி. தற்போது அவர்களின் பிரிவு குறித்து இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2015ல் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பிரின்ஸ் நருலா, யுவிகா செளத்ரி.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் 2018 அக்டோபர் 12 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப்பின் 2024ல் இருவரும் IVF சிகிச்சை மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். மகளுக்கு இக்லீன் நருலா என்று பெயரிட்டு, குருநானக் ஜெயந்தி அன்று மும்பையிலுள்ள குருத்வாராவில் தங்களின் மகளை அறிமுகப்படுத்தினர்.
விவாகரத்து
இந்நிலையில் பிரின்ஸ் நருலாவும் யுவினா செளத்ரியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருக்கொருவர் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இதனை அறிந்த பலரும் இருவரும் விவாகரத்து செய்துகொள்வார்களா என்று கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே யுவிகா கர்ப்பமாக இருக்கும்போது இதுபோல் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் பரவியதை அடுத்து தற்போது மீண்டும் இருவரும் பிரியப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இருவரும் விவாகரத்து குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
