ஜூலை மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுவதுடன், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் குரு பகவானும் ஜூலை 16ஆம் தேதி கடக ராசியில் ஒன்றிணைகின்றனர்.

சுமார் ஒரு மாதம் நீடிக்கும் இந்த அரிய சேர்க்கை, ஜோதிடப்படி அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும் யோகமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக குருவின் உச்ச ராசியான கடகத்தில் இந்த இணைவு நடைபெறுவதால், சில ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி, தொழில் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி,  12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும்  இந்த குரு–சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

மேஷம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! | Sun Jupiter Conjunction In Cancer Who Get Luck

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை 4-ஆம் வீட்டில் நடைபெறுகிறது. இதன் தாக்கத்தால் வருமானத்தில் எதிர்பாராத ஏற்றம் உண்டாகும்.

தொழில் மற்றும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து, வசதியான வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

ரிஷபம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! | Sun Jupiter Conjunction In Cancer Who Get Luck

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை 3-ஆம் வீட்டில் அமைகிறது. இதனால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணலாம். ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். நிதி நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.

கடகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! | Sun Jupiter Conjunction In Cancer Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை லக்னத்தில், அதாவது முதல் வீட்டில் நடைபெறுகிறது. இதனால் ஆளுமை மெருகேறி, தன்னம்பிக்கை உயரும்.

செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்.

சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! | Sun Jupiter Conjunction In Cancer Who Get Luck

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை 10-ஆம் வீட்டில் நடைபெறுகிறது. இதனால் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் அறிவுத்திறன் மேம்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசு பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை முன்பைவிட சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.