ஜோதிடத்தில் புதன் வக்ரமாவதால் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புதன் வக்ரநிலை

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு மற்றும் வியாபாரம் இவற்றிற்கு காரணியாக கருதப்படுகின்றார்.

கிரகங்களில் மிக வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியவர் ஆவார். சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் தனது ராசியை மாற்றக்கூடியவர் ஆவார்.

புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக இருக்கின்றார். ஜுன் 22ம் தேதி கடக ராசிக்குள் நுழைந்த புதன் ஜுன்29ம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்க உள்ளார்.

சில ராசியினருக்கு இவை அதிர்ஷ்டமாக இருந்தாலும் சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் இவர்கள் எந்த பெரிய முடிவையும் எடுக்காமல் பொறுமையாக இருப்பது அவசியம்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். 

வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Mercury Retrograde In Cancer On 29 June Zodiac

மிதுனம்

மிதுன ராசியினரின் 2வது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ள நிலையில், பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தவறான புரிதல் அதிகரிக்கவும், விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆகவே வேலையில் பிரச்சனை சந்திக்க நேரிடும். நீங்கள் பேசும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எந்த முடிவையும் எடுப்பதோ அல்லது புதிய வேலைகளை தொடங்குவதையோ தவிர்க்க வேண்டும்.

வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Mercury Retrograde In Cancer On 29 June Zodiac

கன்னி

கன்னி ராசியினரின் 11வது வீட்டில் புதன் வக்ரமடையும் நிலையில், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரித்து, ஓய்வு எடுக்கமுடியாமல் உடல் சேர்வை சந்திக்க நேரிடும்.

வேலை ஏற்படும் சிறு தவறுகள் கூட மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்யவும். கூட்டு வணிகம் செய்பவர்கள், கூட்டணியாக இருப்பவர்களுடன் வெளிப்படைதன்மையாக இருக்கவும். இல்லையெனில் உறவை பாதிக்கும்.

வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Mercury Retrograde In Cancer On 29 June Zodiac 

தனுசு

தனுசு ராசியினர் 8வது வீட்டில் வக்ரமாகவுள்ள நிலையில், தொழில் மற்றும் பண விடயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். 

வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் அதனை தள்ளிப்போடுவது சிறந்தது. எந்த முதலீடுகளையும் செய்ய வேண்டாம். பணம் தொடர்பான முடிவையும் தவிர்க்கவும்.

ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையை கொண்டு வரும்.

வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Mercury Retrograde In Cancer On 29 June Zodiac

மீனம்

மீன ராசியில் 5வது வீட்டில் புதன் வக்ரமாகும் நிலையில், பண பிரச்சனை அதிகமாக இருக்கும். வரவு செலவுகளுக்கு இடையில் சமநிலை சீர்குலைந்து, மன அழுத்தம் உண்டாகும். 

பணியிடத்தில் பிரச்சனை சந்திக்க நேரிடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இதனால் ஏமாற்றம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் பண பிரச்சனையால் அவதிப்படுவீர்கள்.

வக்ரமாகும் புதன்... கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Mercury Retrograde In Cancer On 29 June Zodiac