இயக்குநர் இமயமாக தமிழ் திரையுலகை கண்டியாண்ட பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 84 வயதில் நேற்று காலமானார்.

அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு - காதலி பற்றி கண்கலங்கி சொன்ன பாரதிராஜா | Paradhiraja Is An Emotionally Charged Love Story

இமயம் பாரதிராஜா

 இயக்குநர் பாரதிராஜா 84 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே உயிரிழந்தார். 

இவரது உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு - காதலி பற்றி கண்கலங்கி சொன்ன பாரதிராஜா | Paradhiraja Is An Emotionally Charged Love Story

இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில், அரசுமரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பாரதிராஜா தன்னுடைய காதல் பற்றி மிகவும் எமோஷனலாக பேசிய விடயம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது. 

இவர் இந்த விடயத்தை இயக்குநர் கௌதம் மேனன் உடனான நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார்.

அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு - காதலி பற்றி கண்கலங்கி சொன்ன பாரதிராஜா | Paradhiraja Is An Emotionally Charged Love Story

அதில் பேசிய அவர் “ஒருநாள் நானும் என் தங்கையும் எங்கேயோ போயிட்டு தேனி வீட்டிற்கு வந்துட்டு இருந்தோம். பூக்கடையில் ஒரு லேடி நிக்குது. வண்டிய நிறுத்துன்ன சொன்னேன்.

பூக்கடையில் அந்தப் பொண்ணு ஏதோ வாங்கிட்டு இருந்தா. அவளின் பின்புறம் மட்டும் பார்த்துட்டு என் சிறு வயது காதலி மாதிரி இருக்கே என்று தங்கையிடம் சொன்னேன். அவ திரும்பி பார்த்ததும் ஷாக்.

அது அவளே தான். எப்ட்றா இத்தனை வருஷம் கழித்து நரச்ச தலைமுடிய வச்சி சொல்லிட்டே என்று தங்கை கேட்டா. அதான் லவ்.

அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு - காதலி பற்றி கண்கலங்கி சொன்ன பாரதிராஜா | Paradhiraja Is An Emotionally Charged Love Story

 அந்த அம்மா கிட்ட வந்து பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தேனு சொல்லுச்சு. கண்ணெல்லாம் கலங்கிட்டேன். அப்புறம் ஒருநாள் வீட்டுக்கு வந்துச்ச கல்யாணத்துக்கு வந்துருங்கனு சொன்னுச்சு.

காபி சாப்பிடுறியாம்மானு கேட்டேன் ஆனா அந்தம்மாவே எங்களோட கிச்சனுக்கு போயி காபி போட்டு வந்து கொடுத்துச்சு. அந்த காபிய வாங்குன பாருங்க.

அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு. அவ கையால ஒரு கப் காபி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுக்கு பேருதான் காதல். அந்த நினைவு இன்னும் ஈரமா இருக்கு" என மிகவும் எமோஷனலாக கூறி உள்ளார்.