* கொவிட் 19 நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தநிலையில், இலங்கையில் கொவிட் 19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
* இலங்கையில் இதுவரையில் 12970 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதுடன், மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் மற்றும் பேலியகொடை மீன்சந்தை ஆகிய இரட்டைக் கொத்தணிகளில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 9492ஆக அதிகரித்துள்ளது.
* வெலிக்கடை சிறையில் நேற்றையதினம் 23 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக அங்கு 30 கைதிகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
* ஹட்டனில் மேலும் 2 பேருக்கும், மட்டக்களப்பு செங்கலடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தலவாக்கலை, மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கும், யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
* நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 563 பேர் நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.
* கொழும்பில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கொவிட்-19 அலையால் 2115 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அங்கு கடந்த இரண்டு தினங்களில்; 5 பேர் உயிரிழந்தனர்.
* பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமுக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட போதும், இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.