மம்தா பானார்ஜி அரசால் கொல்கத்தாவில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு முன் நிறுவப்பட்டிருந்த சிற்பம், அகற்றப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு 15 வருடத்திற்குப் பிறகு அதிகாரத்தை இழந்துள்ளது. இங்கு பாஜக அரசு அமைந்துள்ளது. சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய சிற்பத்தின் வடிவம்

இந்த சிற்பம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அதற்குக் காரணம் அந்த சிற்பத்தில் ஒரு வீரரின் உடல் இடுப்பிற்கு மேல் இருக்காது. இரண்டு கால்களில் இரண்டு பந்துகள் இருக்கும். இடுப்பு பகுதிக்கு மேல் உருண்டை வடிவத்தில் கால்பந்து இருக்கும்.

இதை பார்த்து சிலர் முணுமுணுத்தனர். சிலர் அருவருக்கத்தக்கதாக உள்ளது என்றனர். ஆனாலும், அந்த சிறப்பம் அங்கேயே இருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் பாஜக தலைவர்கள், இந்த சிலை அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர். தற்போது பாஜக அரசு அமைக்கப்பட்ட நிலையில், சிலை அகற்றப்பட்டுள்ளது.