அனிருத்தின் தந்தை அனிருத் எப்போது திருமணம் செய்து கொள்வார் என கேட்ட கேள்விக்கு மிக ஓபனாக பதிலளித்துள்ளார்.

அனிருத்
2012ம் ஆண்டு “3” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால் இவர் இளம் இசையமைப்பாளராக முன்னணி நிலைக்கு வந்தார்.
இந்த நிலையில் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் சமீபகாலமாக கிசுகிசுக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

இசையமைப்பாளர் அளிருத் காவ்யா மாறனை டேட்டிங் செய்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி இருக்க பேட்டி ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் எப்போது திருமணம் செய்யப் போகிறார் என்ற கேள்வி அவரின் தந்தையிடம் கேட்கப்பட்டது. அவர் அதற்கு கூறியுள்ள விளக்கத்தை பார்க்கலாம்.

திருமண தேதி எப்போது?
ஒரு நேர்காணலில் பேசிய ரவி ராகவேந்திராவிடம், “அனிருத் இப்போது தான் சினிமாவுக்கு வந்த மாதிரி இருக்கு. முன்னணி பிரபலங்கள் அனைவருக்கும் இசை அமைத்து விட்டார்.
அவர் எந்த மேடைக்கு போனாலும் எப்போது திருமணம் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது”.. அனிருத்துக்கு எப்போது தான் திருமணம் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரவி ராகவேந்திரா, ”இப்படி கேட்பவர்களிடம் நான் சொல்லும் பதில்.
உங்களுக்கு தெரிஞ்சா தேதி சொல்லுங்க என்று தான் கூறுகிறேன். கல்யாண பேச்சு கூட எடுக்க மாட்டோம். இன்றைக்கு எந்த பையன் தான் பெற்றோர்களிடம் ஒரு பெண்ணை திருமண செய்ய ஆசைப்படுகிறேன்.

கட்டி வைங்க என சொல்கிறார்கள்?. சில பேர் சொல்லலாம். யாருமே கல்யாணம் பண்ணிகலாமா என கேட்பதில்லை.
நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன் என்றுதான் கூறுகிறார்கள். நாங்களும் காத்திருக்கிறோம். பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
