இந்தியாவில் சிறுமி ஒருவர் வைத்த வேண்டுகோளை முதலமைச்சர் விஜய் சட்டென ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்பட்டது பரபரப்பாக பேசப்படுகின்றது.
முதலமைச்சர் விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், சில கட்சிகளுடன் இணைந்து தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார்.
பல தடைகளை தாண்டி முதலைமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுவாக உயர் அதிகாரிகள் அமரும் இருக்கையில் வெள்ளை நிற துண்டு போட்டிருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் இருக்கையிலும் இந்தமாதிரியான வெள்ளை துண்டு இருக்கின்றதை அவதானித்து சிறுமி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

துண்டு கலாச்சாரத்தை மாற்றிய விஜய்
மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது இன்ஸ்டாமில் பகிர்ந்த வேண்டுகோளை விஜய் அவதானித்த நிலையில், ஒரு நொடி கூட தாமதம் கொள்ளாமல் சட்டென்று மாற்றியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் விஜய் செய்த செயலைக் குறித்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இப்படியொரு துண்டு கலாச்சாரத்தினை நொடியில் சிறுமி கூறிய ஒற்றை பதிவிற்காக மாற்றியுள்ளார். இதனை பார்க்கும் போது சமூக வலைத்தளங்களை அதிகமாக கண்காணித்து வருவது தெரிய வந்துள்ளது.
இருக்கையில் துண்டு போடுவது ஆங்கிலேயர் காலத்து நடைமுறை என்றும் விஐபி-களின் கலாச்சாரம் என்றும் இதனை கைவிட வேண்டும் குறித்த சிறுமியும் ஆர்வலருமான லிசிபிரியாவின் வேண்டுகோள் வைத்தது தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

