மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

54 வயதான குறித்த கிராம உத்தியோகத்தர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி, மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்களால் இன்றைய காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.