அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் நிலையில், இந்நாளில் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்.
வைகாசி மாதம் சுக்கில பட்ச திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
அட்சய என்றால் அழியாதது என்று பொருள். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, புதன்கிழமை அன்று வருகிறது.
ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை அன்று சில சிறப்பு பரிகாரங்களைச் செய்தால் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு அட்சய திருதியை அன்று பூஜை செய்ய வேண்டுமாம். மேலும் குறித்த சிலைகளுக்கு பசும்பாலில் குங்குமப்பூ சேர்த்து அபிஷேகம் செய்யவும். இவ்வாறு செய்யும் லட்சுமி தேவியின் மந்திரங்களை கூறினால், ஏழையாக இருப்பவர் கூட சில நாட்களில் செல்வந்தராக மாற முடியுமாம்.
லட்சுமி தேவியை மகிழ்விக்க பல மந்திரங்கள் மற்றும் துதிகள் உள்ள நிலையில், இவற்றில் ஸ்ரீசூக்தமும் ஒன்றாகும். சிவப்பு நிற ஆடையணிந்து, லட்சுமி படம் அல்லது சிலை முன்பு நெய் தீபம் ஏற்றி ஸ்ரீசூக்தம் பாராயணம் செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
மஞ்சள் கிழங்கு மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தையும் சிவப்பு துணியில் சுற்றி உங்களது பணப்பெட்டியில் வைத்து வணங்கினால் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் செழிப்பாகவும் இருக்கும்.
லட்சுமி தேவியை மகிழ்விக்க ராசிப்படி உள்ள மந்திரங்களை அட்சய திருதியை அன்று ஜபிக்க வேண்டும். இதற்கு முன் லட்சுமி தேவிக்கு பூஜை செய்துவிட்டு, தாமரை மாலையால் இந்த மந்திரத்தை ஜபிக்கவும். உங்கள் ராசிக்குரிய லட்சுமி மந்திரம் தெரியவில்லை என்றால், ஒரு ஜோதிடர் அல்லது பண்டிதரிடம் கேட்கலாம்.
செல்வ செழிப்பை அதிகரிக்கும் யந்திரங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யவும். இவை பணப்பிரச்சனை ஏற்படாமலும் தடுக்குமாம்.