கருத்தம்மா படத்தில் நடித்த நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் ராஜா

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் பிரபலமான நடிகர் தான் ராஜா. தற்போது வயதாகி தோற்றம் மாறியிருக்கும் நிலையில், இவரது புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ராஜா, சின்ன முள் பெரிய முள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

பின்பு 1984ம் ஆண்டு வெளியான வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் நடித்தார். பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

90களில் கலக்கிய நடிகர் ராஜாவா இது? அடையாளம் தெரியாத வகையில் தற்போதைய புகைப்படம் | 90S Star Karuthamma Actor Raja Latest Photo Viral

 

அடையாளம் தெரியாமல் மாறிய ராஜா

நடிகர் ராஜா கடைசியாக கடந்த ஆண்டில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனக்கென தனி இடத்தை பிடித்த இவர், தெலுங்கில் கடைசியாக ஸ்கண்டா படத்தில் நடித்தார்.

அதன் பின்பு எந்தவொரு தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது 61 வயதாகும் ராஜாவின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது. 

தற்போது வயதான தோற்றத்தில ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ராஜாவை பார்த்த ரசிகர்கள் 90ல் நடித்த நடிகர் ராஜாவா இது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.