நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சுப்பர் ஹிட் அடித்த தி கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இந்த படத்தில் நடிக்க விஜய் பயன்படுதிய கார் நம்பர் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

விஜய்யின் GOAT பட கார்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தன் மூலம் அரசியலில் களம் இறங்கினார்.

கட்சியை ஆரம்பித்து வெறும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியீட்டி மாபெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நடிகராக உச்ச சம்பளத்தில் முன்னிலையில் இருந்த விஜய் தற்போது தமிழக முதல்லவராக அரசியலிலும் உச்சம் தொட்டுள்ளார். இந்நிலையில், கோட் (GOAT - The Greatest Of All Time) திரைப்படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் பதிவு எண் TN 07 CM 2026 இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த எண் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலையும், விஜய் அரசியலில் நுழைவதையும் முன்னரே கணித்துள்ளதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
