நாம் காலையில் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்பது தற்போது வரை யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது.

காலையில் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும்?
ஆரோக்கியமாக இருக்க, தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம் என்று கருதப்படுகிறது. போதுமான தூக்கம் இருந்தால் தான் நமக்கு நோய்கள் வராது.
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் பலரும் தூக்கத்தை மற்நது வேலை செய்கிறார்கள் இதனால் தூக்கத்தின் அளவு குறைவதுடன் உடல் பல நோய்களுக்குள்ளாகும்.
அறிவியல்படி காலையில் எழுவதற்கு சிறந்த நேரம் இருப்பதாக கூறப்படுகின்றது. இதன்படி நாம் நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சரியான நேரத்தில் தூங்காததாலும், சரியான நேரத்தில் எழாததாலும் மக்கள் நோய்களுக்கு இரையாகின்றனர்.
காலையில் எழுவதற்கான சரியான நேரம் எது என்று பலருக்கு இன்னும் தெரியாது அதை பதிவில் பார்க்கலாம்.

சரியான நேரம்
ஆயுர்வேதத்தின்படி, சூரிய உதயத்திற்கு சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்களுக்கு முந்தைய நேரம் 'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
இது பொதுவாக காலை 4:00 மணி முதல் 5:30 மணிக்குள் நிகழ்கிறது. இந்த நேரத்தில் கண்விழிப்பது, உடலில் வாதத்தின் சீரான சுழற்சியை ஊக்குவித்து, ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுக்குமாம்.
வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும். இது நுரையீரல் மற்றும் மூளைக்கு அமிர்தம் என்று கருதப்படுகிறது. ஆனால் பலரும் இந்த நேரத்தில் உறங்குவதில்லை. அப்படி உறங்கினால் மன அமைதி உச்சத்தில் இருக்கும்.

நமது உடலில் ஒளி மற்றும் இருளுக்கு ஏற்ப இயங்கும் ஒரு உயிரியல் கடிகாரம் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. இது அறிவியல்படி சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது.
உடலில் கார்டிசோல் அளவு காலை 6:00 மணி முதல் 8:30 மணிக்குள் உயரத் தொடங்குகிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்தாமல், 9 அல்லது 10 மணி வரை நீங்கள் தூங்கினால், நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள்.
சூரியனின் முதல் கதிர்கள் உங்களுக்கு தென்பட்டவுடன் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனான மெலடோனின் குறையத் தொடங்குகிறது.
எனவே அறிவியலின்படி, சூரிய உதயத்துடன் அல்லது அதற்குச் சற்று முன்பு எழுந்தால் அது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

வயதுக்கு சரியான நேரம்

