ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’லவ்வர்’ உள்பட 3 தமிழ் படங்களும் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன.  இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.


 

மணிகண்டன், கௌரி பிரியா நடிப்பில் பிரபு ராம்   இயக்கத்தில் உருவான ’லவ்வர்’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது 

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம்  இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது 

சபீர், மிர்னா, வரலட்சுமி, இந்திரஜித், பொற்கொடி, தீப்தி நடிப்பில் உருவான ’பர்த் மார்க்’ என்ற திரைப்படம் ஆகா  ஓடிடியில் இன்று வெளியாகிறது.

மேலும் ‘சுந்தரம் மாஸ்டர்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘ரேப்பிட் ஆக்சன் மிஷன்’ என்ற தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இன்று வெளியாகிறது.