இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தம்பதிகளுள் ஒருவர் அதிகம் படித்ததால் ஏற்படும் சிக்கல்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் பங்கேற்ற பெண்ணொருவர் தன் கணவர் தன்னை படிப்பை சொல்லி பல முறை மட்டம் தட்டி பேசியுள்ளார் எனவும், அதற்கான ஒரு முறை கூட மன்னிப்பு கேட்டதே இல்லை எனவும், மேடையில் கண்கலங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

படிப்பை சொல்லி மட்டம் தட்டும் கணவர்... தமிழா தமிழா மேடையில் கண்கலங்கிய பெண்! | Tamizhatamizha Husband Belittles Wife Video Viral

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் தம்பதிகளுள் ஒருவர் அதிகம் படித்ததால் ஏற்படும் சிக்கல்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.