விஜய்யை எதிர்த்து பெரம்பூரில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் போட்டியிட உள்ள பெரம்பூர்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெரம்பூர் தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. 

விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் - யார் இவர்? | Who Is Rd Shekar Perambur Dmk Candidate Vs Vijay

நாளை தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ள விஜய், நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெற்றி தமிழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

யார் இந்த ஆர்.டி.சேகர்?

திமுகவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி.சேகருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் - யார் இவர்? | Who Is Rd Shekar Perambur Dmk Candidate Vs Vijay

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைதேர்தல் மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆகிய 2 தேர்தல்களிலும் ஆர்.டி.சேகர் 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், 2006 சென்னை மாநகராட்சி தேர்தலில் 2வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள ஆர்.டி.சேகர், 1988 ஆம் ஆண்டில் எழும்பூர் பகுதி திமுக மாணவரணி அமைப்பாளராக இருந்தார்.

அதன் பின்னர், வட சென்னை திமுக மாணவரணி அமைப்பாளர், வட சென்னை இளைஞரணி அமைப்பு செயலாளர், பகுதி செயலாளர், வடசென்னை திமுக மாவட்ட செயலாளர், இளைஞரணி துணை செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.