நீரிழிவு நோயாளிகள் ஆயுர்வேத நிபுணர் பரிந்துரைக்கும் ஒரு கஞ்சியை குடித்து வந்தால் அவர்களுக்கு இரத்த சக்கரை ஏறாமல் கட்டுப்பாடாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள்
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எந்த உணவையும் கஞ்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்வார்கள். காரணம் இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதற்காக.
ஆனால் எல்லா கஞ்சி வகைகளும் அப்படி இல்லை. ஒரு சில கஞ்சி குடிப்பதால் அது நமது உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைத்திருக்கும். அப்படியொரு கஞ்சியை தான் டாக்டர் சாந்தி பரிந்துரைத்துள்ளார்.
டாக்டர் சாந்தி பரிந்துரைத்த இந்த கஞ்சியை நீரிழிவு நோயாளிகள் குடித்து வந்தால் அவர்கள் சக்கரையை தங்களுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை அளவைக் குறைக்கும் கஞ்சி
செய்ய தேவையான பொருள்கள்
- ராகி - 1 டேபிள் ஸ்பூன்,
- பார்லி - 1 டேபிள் ஸ்பூன்,
- சாமை - 1 டேபிள் ஸ்பூன்,
செய்யும் முறை
இந்த கஞ்சி செய்ய முதலில் ஒரு பௌலில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 ஸ்பூன் அளவு அரைத்து வைத்திருக்கும் மேலே கூறப்பட்ட இந்த 3 பொருட்களின் பொடியைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு கைவிடாமல் கிளற வேண்டும். அடியில் கட்டி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.
கொதித்து கஞ்சி பதத்துக்கு மாவு நன்கு வெந்து வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

நன்மைகள்
- இந்த கஞ்சியில் சேர்க்கும் சாமை நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.
- சாமையில் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு. மேலும் இதில் மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வரும்.
- பார்லியை ஊறவைத்து தண்ணீராகவோ கஞ்சியாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள டையூரிடிக் பண்பு மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
- மேலும் ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வதை்திருக்கும்.
- ராகியில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் அது மட்டுமன்றி இது சக்கரை நோயாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
