பொதுவாக இரவு நேரங்களில் பால் குடிப்பது பலரின் பழக்கமாக இருந்து வருகின்றது.
அதிலும், மஞ்சள் கலந்த பாலில் அமினோ அமிலம் மற்றும் டிரிப்டோபான் அதிகமாக இருக்கும். இதனை இரவில் குடித்து விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
மனதையும், உடலையும் ஓய்வு பெற செய்யும் ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு சக்திகள் நிறைந்த மஞ்சள் பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகின்றது
இது போன்று எண்ணற்ற பலன்களை மஞ்சள் பால் தருகின்றது. அந்த வகையில், மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. இதனால் உடல் வீக்கமாக இருக்கும் பொழுது மஞ்சள் பால் குடிக்கலாம். இது வீக்கத்தை குறைக்கும்.
2. தினமும் இரவு மஞ்சள் பால் குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் இருக்காது என சொல்லப்படுகின்றது.
3. இரவு நேரங்களில் மஞ்சள் பால் குடிப்பதால் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகத்திற்கு புது பொலிவு கிடைக்கும்.
4. மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கு கல்லீரல் பிரச்சினைகள் வருவது குறைவு என சொல்லப்படுகின்றது. ஏனெனின் மஞ்சள் பாலில் இருக்கும் சத்துக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
5. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் உணவுகளில் மஞ்சள் பாலும் ஒன்று. இதனால் டயட்டில் இருப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மஞ்சள் பாலை தினமும் குடிக்கலாம்.
6. மஞ்சள் பால் குடிக்கும் ஒருவருக்கு இருமல், சளி, சுவாசப் பிரச்சனைகள் வருவது குறைவாக இருக்கும்.