ஜோதிடத்தில் குரு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றார். இவரின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு அதன் உச்ச ராசியான கடக ராசியில் நுழையப் போகிறார்.

ஜோதிடத்தின் படி, இந்தப் பெயர்ச்சி பல ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான நல்ல பலன்களைத் தரும்.

12 ஆண்டின் பின் உச்சம் பெறும் குரு - 3 ராசிகளுக்கு தேடி வரும் பணம் | After 12 Years Guru Peyarchi Cancer Money Growthபஞ்சாங்கத்தின்படி, ஜூன் 2 ஆம் தேதி குரு அதன் உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வருவதால் சில ராசிக்காரர்களுக்கு நிதி வலிமை அதிகரிக்கும். 

ஜோதிடத்தில், குரு அறிவு, குழந்தைகள், திருமணம், செல்வம் போன்ற செல்வத்தை அள்ளித்தரும் கிரகமாகக் கருதப்படுகிறது.

எனவே தெற்போது குரு உச்சம் பெறுவதால் குறிப்பிட்ட சில ராசிகள் வேலையில் பதவி உயர்வு, வணிகத்தில் விரிவாக்கம், முதலீடுகளிலிருந்து லாபம் மற்றும் புதிய திட்டங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிககும் அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

12 ஆண்டின் பின் உச்சம் பெறும் குரு - 3 ராசிகளுக்கு தேடி வரும் பணம் | After 12 Years Guru Peyarchi Cancer Money Growth

மிதுனம்

  • குரு உங்கள் ராசியிலிருந்து 12வது வீட்டில் பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • குரு ஏழாவது மற்றும் கர்ம வீடுகளின் அதிபதியாக இருப்பதால் இந்த காலத்தில் வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் மற்றும் நிதி வாய்ப்புகள் உருவாகலாம்.
  • தொழிலதிபர்கள் புதிய தொடர்புகள் மூலம் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.
  • நிதி நிலைமை முன்பைவிட வலுவாகும். 

கடகம்

  • குருவின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
  • 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு உங்கள் ராசியில் நுழைவதால் நம்பிக்கை அதிகரித்து தொழில் முன்னேற்றம் கிடைக்க அதிக வாய்ப்புகள் அமையும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கும்.
  • ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடுகள் செய்தால் லாபம் இரட்டிப்பாகும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி அதிகரிக்கும்.

விருச்சிகம்

  • குருவின் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடும்.
  • குரு உங்கள் ராசியிலிருந்து அதிர்ஷ்ட வீட்டிற்கு செல்லுவதால் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • நிலுவையில் இருந்த பணிகள் நிறைவு பெறலாம். வெளிநாட்டு பயணம் அல்லது உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
  • போட்டித் தேர்வுகள் மற்றும் புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
  • நிதி நிலை சீராகி, பழைய கடன்களிலிருந்து நிவாரணம் பெறும் வாய்ப்பும் உள்ளது.