பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசைக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்களின் காலை உணவு நிச்சயம் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும்.

இப்படி காலை உணவுக்காக தயார் செய்த இட்லி மிச்சம் இருந்தால் அதை பலரும் தூக்கியெறிந்து விடுவார்கள் அல்லது சிலர் உப்புமா செய்வது வழக்கம்.

மீந்து போன இட்லியில் இனி உப்புமா செய்யாதீங்க.... இப்படி செய்தா சட்டுன்னு தீந்துடும்! | Best Leftover Idly Recipe How To Make Chilli Idly

ஆனால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிச்சமான இட்லியை வைத்து எவ்வாறு அசத்தல் சுவையில், சில்லி இட்லி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீந்து போன இட்லி - 4 

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 3 தே.கரண்டி

கடுகு - 1/4 தே.கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப

கறிவேப்பிலை - 1 கொத்து

மஞ்சள் தூள் - 1/4

மிளகாய் தள் - 1/2 தே.கரண்டி

சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி

சர்க்கரை - 1தே.கரண்டி

தண்ணீர் -சிறிதளவு

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 

எலுமிச்சை சாறு - 2 தே.கரண்டி

மீந்து போன இட்லியில் இனி உப்புமா செய்யாதீங்க.... இப்படி செய்தா சட்டுன்னு தீந்துடும்! | Best Leftover Idly Recipe How To Make Chilli Idly

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில்,  மீந்து போன இட்லியை சற்று நீளத் துண்டுகளாக வெட்டிக் போட்டுக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இட்லி துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 தே.கரண்டி  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வாரையில், வதக்கிக்கொள்ள வேண்டும். 

மீந்து போன இட்லியில் இனி உப்புமா செய்யாதீங்க.... இப்படி செய்தா சட்டுன்னு தீந்துடும்! | Best Leftover Idly Recipe How To Make Chilli Idly

அதனையடுத்து அதில், நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு,தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் சர்க்கரை சேர்த்து, சிறிதளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்தும், ப்ரை செய்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு மசாலா இட்லியுடன் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

இறுதியாக எலுமிச்சை சாற்றினை சேர்த்து, கிளறிவிட்டு சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் இவ்வளவு தான் அசத்தல் சுவையில் சில்லி இட்லி தயார்.