சனி மற்றும் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தினால் எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நவபஞ்சம ராஜயோகம்
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. மேலும் கிரகங்களினால் உருவாகும் யோகத்தினால் இந்த தாக்கம் கூடுதலாகவே இருக்குமாம்.
அந்த வகையில் கிரகங்களின் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தருகின்றார்.

ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருக்கும் நிலையில், தற்போது மீன ராசியில் பயணித்து வருகின்றார். அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வ செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
இந்த இரு கிரகங்களினால் ஜுன் 25ம் தேதி மங்களகரமான நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் சனி, சுக்கிரன் நட்பு கிரகமாக கருதுப்படுகின்றது.
இந்த இருகிரகங்களால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் இன்னும் சிறப்பாக இருக்குமாம். இந்த யோகமானது சில மணி நேரங்களுக்கு மட்டுமே முழுமையாக இருந்தாலும், இதனால் 4 ராசியினர் சிறப்பான பலனை பெறுகின்றனர்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் நவபஞ்ச யோகத்தினால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடப்பதுடன், நிதி நிலையில் நல்ல முன்னோற்றம் ஏற்படுகின்றது.
பணி இடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதுடன், புதிய தொழில் தொடங்க இந்த காலம் ஏற்ற காலமாக இருக்கின்றது. நிதி ஆதாயம் கிடைப்பதுடன், நீண்ட காலம் வராமல் இருந்த பணம் வந்துசேரும்.

மிதுனம்
சனி சுக்கிரனால் ஏற்படும் ராஜ யோகம் மிதுன ராசியினருக்கு முழு அதிர்ஷ்டத்தின் ஆதரவை அளிக்கின்றது. வேலையில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டு பயணங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலமாக செல்வம் அதிகமாக பெருகுமாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த நவபஞ்சம ராஜயோகத்தினால் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைப்பதுடன், முதலீடுகளில் எதிர்பாராத அளவில் லாபமும் கிடைக்குமாம்.
வேலையை மாற்றுவதற்கு நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தால் இந்த காலம் அதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்
சனி மற்றும் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தினால் கும்ப ராசியினருக்கு இன்பத்தினை பெறுவதுடன், பல புதிய வழிகளில் இருந்து பணம் சேரும்.
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் கனவு இந்த காலத்தில் நனவாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், நீண்ட காலமாக இருந்த மனஅழுத்தம் குறைந்து மனதில் சந்தோஷம் பெருகுமாம்.

