இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2001ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மேலும் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இதுவரை 10 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 7 பேர் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்றும் தற்போது கண்டறியப்பட்ட மூவரும் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 428 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1562ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.