2026 ஆம் ஆண்டில் சனி பகவான் தன ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சனியின் ஆசியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் சனி பகவான் உருவாக்கும் ராஜயோகம் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பட் காத்திருக்கு! | Saturn To Form Rajayoga In 2026

துலாம்: நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள்.

கடகம்: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பயணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

மகரம்: தைரியமும் வீரமும் அதிகரிக்கும். இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.