ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பார்போரை நொடியில் ஈர்க்கும் அளவுக்கு வியக்க வைக்கும் பேரழகுடையவர்களாக இருப்பார்கள்.
அப்படி மற்றவர்களை முதல் பார்வையிலேயே கவரும் வசீகர அழகுடன் பிறப்பெடுத்த அதிர்ஷ்டசாலி பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் அன்புக்கும் அழகுக்கும் உரிய கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயற்கையிலேயே வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கண்களும் இவர்கள் மேல் தான் இருக்கும். இவர்களின் பார்வை மற்றும் முகத்தில் ஒரு காந்த ஆற்றல் எப்போதும் இருக்கும்.
அவர்களிடம் ஒரு அமைதியான சமநிலை இருக்கிறது, அது மக்களை நெருங்கி வர ஒரு அமைதியான அழைப்பைப் போல ஈர்க்கிறது. இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான துலாம், தோற்றம் உட்பட வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் மற்றவர்ளை ஈர்க்கும் ஆற்றலை கொண்ருக்கும்.
இந்த ராசி பெண்கள் தங்களின் உடை மற்றும் அலங்காரங்களுக்காக அதிக பணத்தையும், நேரத்தையும் செலவிட தயாராக இருப்பார்கள்.
இவர்களிக்கு ஆடம்பர பொருட்கள் மீது இயல்பாகவே தீராத மோகம் இருக்கும். இவர்களின் இந்த குணம் இவர்களின் அழகை மேலும் அதிகரிக்கின்றது.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசி பெண்கள் இயல்பாகவே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மற்றும் வசீகர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமான தங்களை காட்டிக்கொள்ள அதிக முயற்சி எடுப்பார்கள். இவர்களுக்கு தங்களை அழகுபடுத்திக்கொள்வதிலும் இயல்பாகவே அதிக ஆர்வம் இருக்கும்.
இவர்கள் தூக்கத்தில் இருந்து எழும் போதும் கூட ஒரு பொலிவாக முகத்துடன் இருப்பார்கள். இவர்களுக்குள் மற்றவர்ளை நொடியில் ஈர்க்கும் ஒரு வசீகர தன்மை இயற்கையாகவே இருக்கும்.