அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா? என நடிகை மீரா மிதுன் நயன்தாராவை விமர்சித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மீரா மிதுன் மேற்படி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மீரா மிதுன் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா? இந்த மாதிரி ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வகையிலான அசிங்கமான கதாபாத்திரத் தேர்வு எல்லாம் தமிழகத்தில் கோலிவுட் சினிமா ஆட்களால்தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் வாய் திறக்க மாட்டார்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.