2026ம் ஆண்டு அற்புதமான சுக்கிரப்பெயர்ச்சி உண்டாகும் நிலையில் இதனால் சில ராசிகள் பெரும் பயன் அடையப்போகின்றனர்.
ஜோதிடத்தின்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சனியின் ராசியில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறுகிறது.
அதன்படி வரும் ஜனவரி 13, 2026 அன்று, செல்வம் மற்றும் செழிப்புக்கான கிரகமான சுக்கிரன் மகர ராசிக்கு இடம்ப்பெயர்ச்சி அடைகிறார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி வரை சுக்கிரன் மகர ராசியில் பயணிப்பார், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயம் மற்றும் உறவுகளில் அன்பை பெறுவார்கள். இந்த பெயர்ச்சியில் நன்மை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- சனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடையாது இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
- புத்தாண்டு தொடங்கும் போது 2025 ஆம் ஆண்டில் நிலுவை வேலைகள் விரைவாக முடியும். மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
- மற்றவர்களிடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். உங்கள் செல்வம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து வருமானம் வந்து சேரும்.
- திருமணமாகாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
- உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்
- சனியின் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார், இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்.
- வசதிகள் மற்றும் இன்பங்கள் அதிகரிக்கும்.
- மூதாதையர் சொத்துக்களால் பயனடைவீர்கள்.
- உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
- உங்கள் துணையுடன் மறக்கமுடியாத ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடலாம்.
மகரம்
- சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், இந்த ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிடத்தக்க லாபங்களை அடைவார்கள்.
- இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று பணம் வரக்கூடும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
- திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
- தடைபட்ட பணம் திரும்பக் கிடைக்கும், நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேறும்.
- நீண்ட காலமாக வீடு அல்லது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இதனை செய்து முடிப்பார்கள்.
- உங்கள் உறவினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
