தங்காலை – குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

குறித்த பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொடை பகுதிக்கு வந்து பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் தமது உறவினருடன் ஒரு வாரக்காலம் தங்கியிருந்து பின்னர் குடாவெல பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.