தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் தான் முருகதாஸ் இப்படத்தில் இருந்து திடீரென விலகியது ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்தது.

திடீரென தளபதி 65 படத்திலிருந்து அவர் வெளியேற என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பிரபல பத்திரிக்கை ஒன்றில் இது குறித்து இரு தரப்பிலும் விசாரிக்கையில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளன.

அதாவது தயாரிப்பு நிறுவனம் தரப்பைச் சார்ந்த சிலர் முருகதாசின் சம்பளம் தான் பிரச்சனை, கடந்த மூன்று படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அவரது சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டது. ஆனால் அதில் அவர் கறாராக இருந்துவிட்டார் அதுதான் பிரச்சனை என கூறியுள்ளனர்.

முருகதாஸ் தரப்பில் விசாரித்தபோது சம்பளத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ரூபாய் 19 கோடி சம்பளம் என்பது ஜனவரியிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. விஜய் சாரின் சம்பளம் படத்தின் பட்ஜெட் ஆகியவைகளும் இறுதி செய்யப்பட்டு விட்டன.

சம்பளத்தில் பிரச்சனை என்றால் அப்போதே முருகதாஸ் வெளியேறி இருக்க வேண்டுமல்லவா. pre-production பணிகளில் ஏன் ஈடுபட்டு எடுக்கப் போகிறார் என பதில் கேள்வி வைக்கின்றனர்.

படத்தின் கதையில் தான் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதுதான் இப்படத்திலிருந்து முருகதாஸ் அவர்கள் வெளியேற காரணம் என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.