தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவராக ஷிவானி நாராயணன் உள்ளே சென்றுள்ளார்.
இவருக்கும் பாலாஜிக்கும் இடையே காதல் மலர தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றாற் போல தொடர்ந்து சில ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி வந்தன.

இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் நுழைய இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது சிவானி நாராயணனுடன் இணைந்து பகல் நிலவு சீரியல் நடித்த அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இவர்கள் சீரியலில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே நல்ல ஜோடி பொருத்தம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
இதனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மீண்டும் எனது ரசிகர்கள் பலர் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. நடிகர் அசீமுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
இருப்பினும் அசீம் உள்ளே நுழைந்தால் பாலாஜி மற்றும் சிவானி காதலில் பிரச்சனைகள் ஏற்படலாம் என பிக்பாஸ் எதிர்பார்க்கிறார்.
