இன்றைய தவறான உணவுப்பழக்க வழக்கத்தால் பல வகையான நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. சில உணவுகள் நமது உடல் நலம் காக்கும் சிலவை நமக்கு கேடுவிளைவிக்கும்.

கொழுப்பு அதிகமாக உடலில் சேரும் போது அது கொலஸ்ட்ராலாக மாறுகிறது. இந்த கொலஸ்ட்ராலை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும். 

கொலஸ்ரால் இருப்பவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நன்மை தரும். இவை எந்தெந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொலஸ்ட்ரால் நமது உடலில் அதிகமாகும் போது அது இதய நோய்களையும் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.

இதனால் இதயம் தொடர்பான சிக்கல்களை குறைக்க, சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் வேகவைத்த பொருட்களை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? அப்போ இந்த நான்கு உணவுகள் தொடவே கூடாது | Health Cholesterol Patients Avoid These 4 Foods

அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் சிவப்பு இறைச்சியை சாப்பிட கூடாது.

இதை தவிர தோல் இல்லாத கோழி அல்லது வான்கோழி மார்பக கறி, மீன் போன்ற நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ள இறைச்சியை உட்கொள்வது நல்லது.

உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? அப்போ இந்த நான்கு உணவுகள் தொடவே கூடாது | Health Cholesterol Patients Avoid These 4 Foods

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ள கூடாது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் வெண்ணெய், மற்றும் சர்க்கரை வறுத்த உணவுகளை உட்கொள்ள கூடாது.