புகுந்த வீட்டிற்கு செல்லும் சில ராசி பெண்கள் ஜோதிடப்படி மாமியாரை கட்டுக்குள் வைப்பார்கள் என கூறப்படுகின்றது.

குழந்தைகள் பிறந்தால் கொண்டாடுவது சாதாரணம். ஆனால் வீடுகளில் பெண் பிள்ளைகள் பிறந்தால் வீட்டிற்கு மகாலட்சுமி பிறந்துள்ளது என கொண்டாடுவார்கள். 

பொதுவாக பெண் பிள்ளைகள் திருமணமாகி இன்னுமொர வீட்டிற்கு செல்பவர்கள் . அவர்கள் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அங்கு மாமியாருடன் அந்த பெண்ணுக்கு இணக்கமான சூழல் அமைந்து விட்டால், அது போன்ற ஒரு சொர்க்கம் வேறு எதுவுமில்லை. 

ஆனால் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. அனால் ஜோதிடத்தின்படி மாமியாருடன் நன்றாக ஒத்துப் போகக்கூடிய அல்லது மாமியாரை தன் கட்டுக்குள் வைக்கக்கூடிய பெண் ராசிகள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

மாமியாரை கட்டுக்குள் வைக்க பிறந்த பெண் ராசிகள் - நீங்களும் இந்த ராசியா? | Zodiac Signs Of Women Control Their Mother In Law

மேஷம்

  1. மேஷ ராசி அதிபதி செவ்வாய். இது ஒரு நெருப்பு ராசியாகும்.
  2. இந்த ராசியில் பிறந்த ஆண், பெண்கள் யாருடைய பேச்சையும் கேட்க விரும்ப மாட்டார்கள்.
  3. அதோடு தன்னுடைய மனதில் தான் ஒரு எஜமானர் என்ற மனநிலை இருக்கும்.
  4. அதனால் யாருடைய பேச்சையும் கேட்க மனம் வராது.
  5. இருப்பினும் இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்.
  6. தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலைகளை கையாள்வதில் மிகவும் திறமையானவர்.
  7. அதனால் மாமியாருக்கும் இந்த ராசி பெண் (மருமகளை) மிகவும் பிடிக்கும்.

மிதுனம்

  1. மிதுன ராசி பெண்கள் மகிழ்ச்சியாக மற்றவர்களை வைத்துக் கொள்ளக்கூடியவர்கள் மற்றும் நட்பானவர்கள்.
  2. இந்த ராசி பெண்கள் யாரிடமும் மிகவும் சிந்தனையுடன் செயல்படுவார்கள்.
  3. இவர்களின் குணம் மாமியார் வீட்டில் மிகவும் பிடிக்கும்.
  4. அதனால் மாமியாருக்கு மட்டுமல்ல, கணவனுக்கும், கணவன் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நபராக இருப்பார்.
  5. இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். 

சிம்மம்

  1. சிம்ம ராசியை சேர்ந்த பெண்கள் இயல்பிலேயே அதிக நம்பிக்கையும், தைரியமான மனநிலையும் கொண்டவர்கள்.
  2. இந்த ராசி பெண்கள் யாரிடமும் தயவு காட்ட விரும்ப மாட்டார்கள்.
  3. அதே போல தன் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
  4. அதனால் மாமியாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இவரை மிகவும் பிடிக்கும்.
  5. இவரின் தெளிவான பேச்சும், பழக்கமும் மற்றவர்களை விரும்ப வைக்கும்.

தனுசு

  1. தனுசு ராசியை சேர்ந்தவர்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என நினைப்பார்கள்.
  2. இது குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னை தர வாய்ப்புள்ளது.
  3. ஆனால் இவர்களின் தனித்துவமான செயல்பாடு, மற்றவர்கள் மீது உள்ள அன்பும், அரவணைக்கும் செயல்பாடு இவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்துவதாக இருக்கும்.
  4. தனக்கென ஒரு கட்டுப்பாடு இருந்தாலும் குடும்ப மரபுகளை சரியாக பின்பற்ற நினைப்பார்கள்.
  5. இதனால் மாமியார் வீட்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் முழு அன்பும் மரியாதையும் பெறுகிறார்கள்.