பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம். எப்போதும் வேலை, ஓட்டம், பணம் என அவர்களின் வாழ்க்கையில் நிலையாக நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே நேரம் இருக்காது. இத்தகைய சூழலில் தங்களை அழகாக வைத்துக் கொள்ள தனியாக நேரம் ஒதுக்குவார்களா என்ன?. ஆண்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்காது. இருப்பினும் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஆண்கள் தங்களை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளலாம்.

முகத்தை தினமும் 2 முறை கழுவவும். ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். ஈரப்பதமூட்டும் கிரீம் சியாபாட்டோல் கொண்ட மொய்ச்சரைசர் பயன்படுத்தவும். வெளியே செல்லும்போது தவறாமல் தடுப்புக் கிரீம் பூசவும்.

ஆண்களே உங்களை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டுமா? மிக முக்கியமான குறிப்பு இதோ | Men To Look And Feel Younger Some Beauty Tips

உணவில் கவனம்

கொலாஜன் அதிகரிக்கும் உணவுகள் முட்டை, சால்மன் மீன், பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். தயிர், கிம்சி, இட்லி ஆகியவை குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் தக்காளி, காரட், பச்சை இலைக் காய்கறிகள் தவறாமல் டையட்டில் சேர்த்து சாப்பிடவும்.

உடல் பராமரிப்பு

ஸ்ட்ரெந்த் ட்ரெய்னிங் மதற்றும் கார்டியோ உடற் பயிற்சிகள் தவறாமல் செய்துவிடவும். தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் புஷ்-அப்ஸ், ஸ்கொயாட்ஸ், புல்-அப்ஸ் செய்யவும். இதுதவிர நல்ல தூக்கம் அவசியம். இரவு 11 மணிக்குள் படுத்து 7-8 மணி நேரம் உறங்குங்கள். 

ஆண்களே உங்களை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டுமா? மிக முக்கியமான குறிப்பு இதோ | Men To Look And Feel Younger Some Beauty Tips

மன அழுத்தம் குறைப்பது  

தினமும் 10 நிமிடம் மெடிடேஷன் செய்து மனதை அமைதிப்படுத்தவும். மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும், வேடிக்கையான செயல்களில் ஈடுபடவும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

புகைப்பழக்கம், மது தவிர்க்கவும். இவை தோல் முதிர்ச்சியை ஏற்படுத்தும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். தினமும் 3-4 லிட்டர் குடிக்கவும். முகம் மற்றும் தாடி எண்ணெய் பயன்படுத்தி மிருதுவாக வைத்திருங்கள். வாரம் இருமுறையாவது தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் அப்ளை செய்து தோல் பிரகாசத்தை அதிகரிக்க செய்யவும். ஆலிவ் ஆயில் மசாஜ் செய்தால் தோல் இறுக்கம் குறையும். 

எதை தவிர்க்க வேண்டும்?

அதிக சர்க்கரை மற்றும் பாக்கெட் உணவுகள் தவிர்க்க வேண்டும். தூக்கமின்மை இருக்கவே கூடாது. மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சிந்தனைகள் கூடவே கூடாது.

இளமையான தோற்றம் என்பது வெளித் தோற்றம் மட்டுமல்ல, உள் ஆரோக்கியத்தையும் சார்ந்தது. தினசரி ஒழுக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறை இருந்தால், வயதானாலும் உங்கள் தோற்றம் இளமையாக இருக்கும்.